தூத்துக்குடி அருகிலுள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் மாசி மாதம் 24-ஆம் தேதி (08.03.2026) ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் மற்றும் மஹா யாக வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது.
உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்து வளரவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி செழிக்கவும் வேண்டி காலை முதல் மாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதன் போது ஶ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் ஆலய வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.