திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 50வது வார்டு பகுதிக்கு உட்பட்ட எஸ்.ஆர். நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் 50வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.


முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 50வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


மேலும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், தமிழக அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைத்து, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், வார்டு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.