திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி 50வது வார்டு பகுதிக்கு உட்பட்ட எஸ்.ஆர். நகரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமையேற்றார். திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் 50வது வார்டு கவுன்சிலர் செ. சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.


விழாவில் 50வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் செ. சரவணகுமார், 50வது வட்ட அவைத்தலைவர் சிவனனைந்த பெருமாள், வட்டச் செயலாளர் ஜி. சிங்கராஜ், வட்டப்பிரதிநிதிகள் வேலுமணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேரர் இளம்பருதி, ரூப ராஜா, காரோலின், தினேஷ், மருத்துவர் அணி அருண்குமார், 35வது வட்டச் செயலாளர் சிங்கராஜ், 36வது வட்டப்பிரதிநிதி டி.கே.எஸ். துரை, போல்ல்பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார்,


விளையாட்டு மேம்பாட்டு அணி டினோ ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்துடன் மாநகர துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், கார்த்திகேயன், பகுதி துணை அணி அமைப்பாளர்கள் ஜான் ஸ்டீபன், ராமச்சந்திரன், சிவசங்கர், மாதவன், கௌதம், சுப்புராஜ், சீனிவாசகுமார், செல்வகுமார், மணிகண்டன், செந்தில்குமார், யாகவன், ஆதிமூலம், செல்வின், சரவணகுமார், கோவில் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.


மகளிர் அணியினர் யோக செல்வி, ரிலாக்ஸ் ஜெயமேரி, ராஜகுமாரி, பட்டு லட்சுமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜ பெருமாள், வீரபாண்டி, குருசாமி, பழனி, சிவபெருமாள், சிவா, அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.