உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தாய்மை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் மகளிர் தின விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி பிரையண்ட் நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தாய்மை உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் பி. ராஜம் தலைமை தாங்கினார். ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். எஸ். ரூபா வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் கிங்காங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதில் ஹோம் சயின்ஸ் கல்லூரி முதல்வர் முனைவர் எம். எஸ். ரூபா, பல் மருத்துவர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாவட்ட HMS சங்க மாவட்ட தலைவர் டாக்டர் ராஜலட்சுமி, வழக்கறிஞர் விஜயலட்சுமி, தொழில் முனைவோர் சங்க மாநில தலைவர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் விஸ்வரூபினி, சமூக ஆர்வலர்கள் சுஜிதா, ஏ. சுமதி, கலை வளர்மணி எஸ். உமாதேவி, கலை சுடர்மணி ஜெயலலிதா, ஏபிசி மகாலட்சுமி கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் தி. லில்லி, கோல்டா, முனைவர் ஹெ. கோகிலா, சுபத்ரா, கிறிஸ்டி, ஜெய ஜோதி, பாத்திமா நகர் பள்ளி தலைமையாசிரியர் மேரி மெல்கியோர், முத்துக்குமாரி, அ. நந்தினி, சி. மல்லிகா, எம். முருகலட்சுமி உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கலை வளர்மணி கலை பேராசிரியர் முனைவர் சகா.மா. சங்கர் தலைமையிலான கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தோர், பொதுமக்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.