ஆசிய அளவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடியை சேர்ந்த வீர மங்கைகளை நேரில் அழைத்து நினைவு பரிசு வழங்கி தூத்துக்குடி தவெக சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.



(23.05.2025) முதல் (27.05.2025) வரை  ஆகிய தேதிகளில் இலங்கையில் ஆசிய அளவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில், தூத்துக்குடியை சேர்ந்த ஷிவானி ஹர்ஷா, விகாஷினி, தபிதா ஆகிய மூன்று வீர மங்கைகள் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

வெற்றி பெற்றவர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.



வெற்றிப் பெற்றவர்களில், ஷிவானி ஹர்ஷா என்ற சிறுமி, தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர் விஜய் கண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.