தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு சோட்டையன் தோப்பு, பூப்பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையைக் கவனத்தில் கொண்டு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.சி. சண்முகையா அவர்கள் இன்று நேரில் சென்று நிலைமை ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீரை வெளியேற்ற மின் மோட்டார் மூலம் நடைபெற்று வரும் பணிகளை அவர் பார்வையிட்டு, அவற்றை மேலும் துரிதப்படுத்த தேவையான உத்தரவுகளை வழங்கினார். மேலும், அதிகமாக நீர் தேங்கிய பகுதிகளில் இருந்து விரைவாக மழைநீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சார்ந்த அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. ஐகோர்ட் ராஜா, மாவட்ட சுற்றுச்சூழணி அமைப்பாளர் திரு. பொன்பாண்டி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் திரு. எஸ்.ஆர். கணேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் திரு. ப்ளோமின்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தொடர் மழையால் தேங்கிய நீர் — மாப்பிளையூரணி பகுதிகளில் MLA எம்.சி. சண்முகையா நேரில் ஆய்வு, துரித நடவடிக்கை உத்தரவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிலம்பம்–யோகாவில் ஒளிர்ந்த இளம் திறமைகள்: கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட போட்டி சிறப்பாக நிறைவு!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் கோயில் – ஸ்ரீ ஐயப்பன் கோவில் பாதையில் இருள் சூழ்வு: விளக்குகள் பழுது சரி செய்ய வேண்டுமென இந்து முன்னணி கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026