தூத்துக்குடி முத்தையாபுரத்தில் தேமுதிக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் கோடைவெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழ்நாடு முழுவதும் தேமுதிகவினர் தண்ணீர் பந்தல்களை திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர் உள்ளிட்ட குளிர் பானங்கள் வழங்கவேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தூத்துக்குடி தேமுதிக சார்பில் முத்தையாபுரத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் தயாளலிங்கம் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

முத்தையாபுரம் பகுதி செயலாளர் ஸ்மார்ட் சுரேஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் மற்றும் தர்பூசணி, பப்பாளி பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், வட்டச் செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட துணை செயலாளர் மாலதி, பகுதி செயலாளர் நாராயணமூர்த்தி, பொருளாளர் சக்திவேல், கருங்குளம் ஒன்றிய பொருளாளர் மணிகண்டன், தொமுச துணைத்தலைவர் சேக்காசின், துணைச் செயலாளர் அக்பர், தகவல்தொழில்நுட்ப அணி பிரம்மநாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.