திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கழகத் துணைப் பொதுச் செயலாளர், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் திருநெல்வேலியில் இன்றைய தினம் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக் கூட்டத்தில், மார்கண்டேயன் கலந்து கொண்டு, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நல கோரிக்கைகள் அடங்கிய விரிவான திட்ட அறிக்கையினை திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கை குழுவிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வுகளில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் நிஷாந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.