திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி, வரும் 27ஆம் தேதி சூரசம்ஹாரம் மற்றும் 28ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் வருகை தரும் நிலையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் இன்று திருச்செந்தூரில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
அவர்கள், திருக்கோவில் வளாகம், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களை பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் அறிவிப்பு பலகைகள் தெளிவாக வைக்கப்பட வேண்டும் எனவும், விழா நாள்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு படையினரை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், கோவில் இணை ஆணையர் ராமு மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நாளான 26 மற்றும் 27ஆம் தேதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தவிர, கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் திருச்செந்தூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி, சாத்தான்குளம், உவரி, குரும்பூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட வழித்தடங்களில் திருச்செந்தூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழித்தடங்கள் மூலம் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வழித்தடங்களாக ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ. ஜங்ஷன், நல்லூர் ‘வி’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “கந்தசஷ்டி திருவிழாவின் சிறப்பாக நடைபெற காவல்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் – டிஐஜி சந்தோஷ் ஹடிமணி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சமூக வலைதளங்களில் இழிவுரை – பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர் மீது அவதூறு பரப்பியவருக்கு நடவடிக்கை கோரி புகார்!!
அடுத்த
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி. மார்கண்டேயன் மனிதநேயச் செயல்: சாலை விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி உதவி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026