பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் தலைவராக செயல்பட்டு வரும் கே.என். இசக்கிராஜா தேவா், தமிழகம் முழுவதும் சமூகநலப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். தூத்துக்குடியில் இயக்கத்தின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கௌதமபுரியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மதன் என்பவர், கே.என். இசக்கிராஜா தேவா் குறித்து சமூக வலைதளங்களில் இழிவான மற்றும் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து, அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் தேவா் சமூக அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மதன் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்யுமாறு அம்பாசமுத்திரம் காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
புகார் மனுவைப் பெற்ற காவல் துறை அதிகாரிகள், சமூக வலைத்தளங்களில் அவதூறு மற்றும் இழிவுரை பரப்பியவருக்கு எதிராக தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.
இச்சம்பவம் அம்பாசமுத்திரம் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
சமூக வலைதளங்களில் இழிவுரை – பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தலைவர் மீது அவதூறு பரப்பியவருக்கு நடவடிக்கை கோரி புகார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் வெள்ள நீர் தண்ணீர் வெளியேற்றம்: கீதாஜீவன் நேரடிக் கண்காணிப்பு!
அடுத்த
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் – டிஐஜி சந்தோஷ் ஹடிமணி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026