தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம், புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ – மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு கிருஷ்ணமூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், வார்டு உறுப்பினர்கள் வெற்றிவேலன், தினகர், தங்கமுத்து, அங்காள ஈஸ்வரி, புதூர் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் பொன்ராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அழகுராஜ், முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் பாலகிருஷ்ணன், வார்டு செயலாளர் ராமசாமி, விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், புதூர் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் வாசுதேவன், புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ், கம்பத்துப்பட்டி கிளைச் செயலாளர் செல்லப்பாண்டி, இளைஞர் அணி சதீஷ்குமார், கார்த்திக் ராஜா, மகளிர் அணி ராசாத்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் – புதூர் ஊராட்சி ஒன்றியம், சிவலார்பட்டி கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில் தென்னையில் ஒருங்கிணைந்த பயிர் வேளாண்மை பயிற்சி மற்றும் வேளாண் இடுபொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சுழற் கலப்பை, திரவ உயிர் உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை வழங்கி உரையாற்றினார். நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, வேளாண்மை உதவி இயக்குனர் மலர்விழி, வேளாண்மை அலுவலர் பிரகாஷ், துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் காயத்ரி, திவ்யபாலா, கிருஷ்ணவேணி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் பொன்ராஜ், வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய இளைஞரணி சதீஷ்குமார், கம்பத்துப்பட்டி கிளைச் செயலாளர் செல்லப்பாண்டி, கம்பத்துப்பட்டி மனோகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பந்தல்குடியில் நடைபெற்ற புதூர் மேற்கு ஒன்றியம், வெம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி இல்லத் திருமண விழாவிலும் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் பொன்ராஜ், விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.