ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆரோக்கியபுரம் புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக தொழுநோய் மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவு மழைநீர் தேங்கி, நோயாளிகள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நோயாளிகள் கடும் சிரமம் அடைந்த நிலையில், எம்.சி.சண்முகையா இரவு–பகல் பாராமல் மருத்துவமனையிலேயே இருந்து மின்மோட்டார்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்களை வரவழைத்து மழைநீரை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.
இந்த மனிதநேய சேவையை பாராட்டி தொழுநோய் மருத்துவமனை தலைமை பொறுப்பாளர் அருட்சகோதரி ராஜீ, எம்எல்ஏக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் TTC. ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தனுஷ்பாலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், ஒன்றிய சுற்றுச்சூழணி அமைப்பாளர் ராஜேந்திரன், கிளை செயலாளர் ஜேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா பங்கேற்ற புனித ஜோசப் தொழுநோய் மருத்துவமனை கிறிஸ்துமஸ்–புத்தாண்டு விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள்!!
அடுத்த
பிரேக்கிங் நியூஸ்: நாளை தூத்துக்குடியில் 7 மணி நேர மின் நிறுத்தம் – காலை 9 முதல் மாலை 4 வரை ‘பவர் ஆஃப்'
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026