ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தருவைக்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 13.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டுமானப் பணிகளுக்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் காயத்ரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ஊராட்சி செயலர் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைக்குளம் கிளை செயலாளர் ராபின் ஞானப்பிரகாசம், தயாளன், பிரசன்னா, மகளிரணி அன்னசெல்வம், ஏ.எம்.பட்டி கிளைச் செயலாளர் பாலமுருகன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.