கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் அனவரதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலம் 74 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் பள்ளியில் பயிலும் மாணவர்களை சந்தித்து, தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் கல்வி சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் கெனிஷா, பள்ளி தலைமை ஆசிரியர் திரவியம், உதவி பொறியாளர்கள் மாரியப்பன், தளவாய், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, ஊராட்சி செயலர் முத்து, கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் பக்கபட்டி சுரேஷ், வீரபாகு, ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பந்தல் பரமசிவன், கிளை செயலாளர்கள் செல்லதுரை, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வசவப்புரம் ஊராட்சியின் அனவரதநல்லூரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளையும் எம்.சி. சண்முகையா தொடங்கி வைத்தார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களை சந்தித்து, கிராமத்திற்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் மாரியப்பன், தளவாய், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து,
ஊராட்சி செயலர் முத்து, ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி, துணை செயலாளர்கள் பக்கபட்டி சுரேஷ், வீரபாகு, ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பந்தல் பரமசிவன், வர்த்தகர் அணி கண்ணன், கிளை செயலாளர்கள் முருகன், ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பாளையங்கோட்டை செய்துங்கநல்லூர் சாலையில்,
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளையும் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர்கள் மாரியப்பன், தளவாய், வருவாய் ஆய்வாளர் மகாராஜன், ஊராட்சி செயலர் முத்து, கருங்குளம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி,
கருங்குளம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் இசக்கிபாண்டியன், துணை செயலாளர்கள் பக்கபட்டி சுரேஷ், வீரபாகு, ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பந்தல் பரமசிவன், வர்த்தகர் அணி கண்ணன், கிளை செயலாளர்கள் முருகன், ராமசுப்பு மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.