தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாகக் காணப்பட்ட எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதியில் வழிகால்கள் மூலமாகவும் மின் மோட்டார் உதவியாலும் நீர் வெளியேறி வருவதை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் நிலையை விரைவாக கட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
பகுதி மக்கள், நீர்தேக்கம் அதிகமுள்ள பகுதிகளில் மேலும் ஒரு மின் மோட்டார் அமைத்தால் நீர் வெளியேறும் வேகம் அதிகரிக்கும் எனக் கோரிக்கை முன்வைத்தனர். இதனை கவனத்தில் கொண்ட மேயர், கூடுதல் மோட்டார் அமைப்பு உள்ளிட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
எட்டையாபுரம் ஹவுசிங் போர்டில் நீர்தேக்கத்துக்கு விரைவு நடவடிக்கை – மேயர் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஹௌசிங் போர்டு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் தீவிரம் – ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா நேரில் பார்வை!!
அடுத்த
மருதூர் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026