தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஹௌசிங் போர்டு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளநீர் தேங்கியுள்ள நிலையில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீர் வெளியேற்ற பணிகள் நடைபெற்று வரும் இடங்களை பார்வையிட்ட அவர், மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை வேகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், தேவையான பகுதிகளில் உடனடியாக கூடுதல் மின் மோட்டார்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார்.
தண்ணீரை வெளியேற்றும் பணியில் பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் தடையில்லாமல் தொடர்ந்து இயங்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குமாறு பொறுப்புக்கூறிய துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜேஷ்கண்ணன், பகுதி கழக செயலாளர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, வட்ட செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட பிரதிநிதி பூவேஷ்நாதன், அவைத்தலைவர் ராஜசேகர், பொறியாளர் அணி தர்மர், இளைஞரணி பத்மநாபன், வேல்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஹௌசிங் போர்டு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் தீவிரம் – ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா நேரில் பார்வை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தொடரும் கனமழை – மீன்வளக் கல்லூரி அருகே வடிகால் கால்வாயை ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
எட்டையாபுரம் ஹவுசிங் போர்டில் நீர்தேக்கத்துக்கு விரைவு நடவடிக்கை – மேயர் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026