ராஜீவ் நகர், P&T காலனி பகுதிகளில் வெள்ளநீர் வெளியேற்ற பணிகள் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மீன்வளக் கல்லூரி அருகே உள்ள மழைநீர் வடிகால் கால்வாயை பார்வையிட்ட அமைச்சர், நீர்ப் பிரவாகம் தடைபடுகின்ற பகுதிகளைப் பற்றி அலுவலர்களிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார். அதே சமயம், தூத்துக்குடி மாநகராட்சி 16ஆம் வார்டில் உள்ள ராஜீவ் நகர் 6வது தெரு மற்றும் P&T காலனி 16வது தெரு பகுதிகளிலும் குடியிருப்புகள் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ளதை நேரில் ஆய்வு செய்தார்.
உடனடி நடவடிக்கையாக, வ.உ.சி. துறைமுக ஆணையத்திலிருந்து தீயணைப்பு வாகனத்தை அழைத்து வரவழைத்து, தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மழை தொடரும் சூழலில் எந்தவித அவசர நிலையும் ஏற்படாதபடி அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
குடிமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தொடரும் கனமழை – மீன்வளக் கல்லூரி அருகே வடிகால் கால்வாயை ஆய்வு செய்த அமைச்சர் கீதா ஜீவன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் கோயில் – ஸ்ரீ ஐயப்பன் கோவில் பாதையில் இருள் சூழ்வு: விளக்குகள் பழுது சரி செய்ய வேண்டுமென இந்து முன்னணி கோரிக்கை!!
அடுத்த
தூத்துக்குடி ஹௌசிங் போர்டு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற நடவடிக்கைகள் தீவிரம் – ஒட்டப்பிடாரம் MLA சண்முகையா நேரில் பார்வை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026