தூத்துக்குடி மாவட்டம் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு அம்பேத்கர் தெருவிலும், 2-வது வார்டு குளக்கட்டான் குறிச்சி ராஜாஜி தெருவிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறக்கப்பட்டன.


இந்த கட்டிடங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V. மார்கண்டேயன் திறந்து வைத்தார். குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த அங்கன்வாடி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


நிகழ்வில் புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார், புதூர் குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் சரளாதேவி, புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மத்திய ஒன்றிய தேர்தல் பார்வையாளர் மாரிமுத்து, பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் பச்சைமலை, மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் வார்டு உறுப்பினர்கள் மாலையம்மாள், வெற்றிவேலன், தினகரன், தங்கமுத்து, சித்ராகணேசன், வார்டு செயலாளர் நவரத்தினம், பேரூர் கழக துணைச் செயலாளர் தம்பிராஜா, புதூர் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் வாசுதேவன், புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி மோகன்தாஸ், பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜு, கம்பத்துப்பட்டி கிளைச் செயலாளர் செல்லப்பாண்டி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


இந்த புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வருவதால் புதூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு பெரும் பயன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.