தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம் சென்னம்பட்டி ஊராட்சியில் ரூ.31.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜன், தினகரன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மத்திய ஒன்றிய தேர்தல் பார்வையாளர் மாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி மோகன்தாஸ், கம்பத்துப்பட்டி கிளைச் செயலாளர்கள் மணி, செல்லப்பாண்டி, கிளை பிரதிநிதி காளிச்சாமி, மகளிர் அணி சங்கரேஸ்வரி, பாக டிஜிட்டல் ஏஜென்ட் வினோத்குமார், இளைஞர் அணி பிரபாகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் மூலம் சென்னம்பட்டி ஊராட்சி மக்களுக்கு நிர்வாக சேவைகள் விரைவாகவும் சிறப்பாகவும் வழங்கப்படும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.