தூத்துக்குடியில் இன்று (16.04.2025) மாலை பாசிச பாஜக அரசை எதிர்த்து மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அறிவுறுத்தலின்படி  காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை முடக்கிய பாசிச பாஜக அரசை கண்டித்தும், அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பாஜக அரசை எதிர்த்தும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூலம் அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி, அவர்கள் மீது பொய்வழக்கு போடும் பாசிச பாஜக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று மாலை வருமான வரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் மாநில துணை தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.