தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (16.04.2025) சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் பிறந்தநாளையொட்டி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


விடுதலைப் போராட்ட தியாகி மாவீரர் சுந்தரலிங்கனாரின் 255வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதல்படி தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின்  சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள மாவீரர் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர் தோழிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.