அதிமுக வர்த்தக அணி சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி. பழனிச்சாமி ஆணையின்படி இன்று ( 16.04.2025) காலை தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகில் பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் அதிமுக வர்த்தக அணி சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.தா. செல்லப்பாண்டியன் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.தா. செல்லப்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். உடன் மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.



செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது :-



இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை தந்த போது முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து பாஜக அதிமுக கூட்டணியை அமைத்துள்ளனர்.

ஆனால் இந்த கூட்டணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு விடியல் தரக்கூடிய அரசு என்று மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சி நடத்தி கொண்டு இருக்கின்ற விடியா திமுக ஸ்டாலின் அரசு பாஜக அதிமுக கூட்டணி அமைத்து கொண்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அய்யோ அம்மா என்று கதறுகிறார்கள்.

திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து கொள்ளவில்லையா, இந்திரா காந்தி அம்மையார் மதுரைக்கு வந்த போது அந்த அம்மையாருக்கு இரத்த காயங்களை ஏற்படுத்தி இதே கலைஞர் தான் பிறகு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று சொல்லவில்லையா, திமுக காங்கிரஸ் வோடு கூட்டணி அமைத்துக் கொள்ளவில்லையா, எங்களுக்கும் (அதிமுக) பாஜக விற்கும் என்ன கருத்துவேறுபாடு ஒன்றும் இல்லையே, இந்திரா காந்தி அம்மையாரை பற்றி எவ்வளவு கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தினார் என்பதை இந்த உலகம் அறியும், அதுபோல போலதான் அந்த திமுக கட்சியில் இருக்க கூடிய தொண்டனும் பேசுகிறார்கள்.

அமைச்சர் பொன்முடி பேசிய வார்த்தைகளை சொல்வதற்கே நாக்கு கூசுகிறது. அவ்வளவு அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். இந்து சைவ வைணவ மதத்தை மிகவும் கேவலமாக பேசி உள்ளார் அமைச்சர் பொன்முடி ஆனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் வெறும் கட்சி பதவியை மட்டும் பறித்து கொண்டு கபட நாடகத்தை அரங்கேற்றி உள்ளது இந்த விடியா திமுக அரசு, இதே போன்று அதிமுகவில் யாரேனும் பேசி இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி என்றால் இப்படி பேசியது யாராக இருந்தாலும் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார்.

அமைச்சர் பொன்முடி பேசியதை பெண்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை இல்லை என்றால் தமிழ்நாடே பத்திகிட்டு எரியும், அமைச்சர் பொன்முடி தொடர்ந்து கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார் இதற்கு முன்பு கூட ஓசி பஸ் என்று பெண்களிடத்தில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக தவறான வார்த்தைகளை பயன்படுத்தினார் இந்த அமைச்சர் பொன்முடி நான் கேட்கிறேன் உங்கள் அப்பன் வீட்டு பணமா மக்களோட வரிப்பணம், மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு தீர்வை உயர்வு, அம்மாவோட ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் இந்த திமுக அரசு முடங்கியுள்ளது.



பொங்கல் பரிசாக எடப்பாடி. பழனிச்சாமி ரூ. 2,500 மக்களுக்கு வழங்கினார். ஆனால் இந்த திமுக அரசு பணம் ஏதும் வழங்காமல் மக்களுக்கு பச்சரிசி, கரும்பு, சீனி போன்றவற்றை வழங்கியது. நான் தெரியாமல் கேட்கிறேன் பொங்கல் வைப்பதற்கு அச்சு வெல்லம் அல்லது மண்ட வெல்லம் பயன்படுத்துவார்கள் என்பது கூட தெரியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் பொருத்தமட்டில் யாரும் நிரந்தர நண்பர்கள் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை, எம்ஜிஆர் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தார்கள். காங்கிரஸ் பிறகு திமுகவோடு கூட்டணி அமைந்தது. இதில் ஒன்றும் தவறில்லை, வருகின்ற சட்ட மன்ற தேர்தலின் போது நல்ல கூட்டணியை அமைத்து தருவேன் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அது போன்று அமைத்து உள்ளார்கள். இது கடவுளால் அமைக்கப்பட்ட கூட்டணி, மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற முன்னாள் முதல்வர் கலைஞர் கம்யூனிஸ்ட் கட்சிகளை எவ்வாறு விமர்சனம் செய்தார்கள். தகரடப்பாக்களை கண்டுபிடித்ததே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தான் என்று சொல்லவில்லையா, தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தற்போது இதே கம்யூனிஸ்ட் கட்சி திமுகவோடு கூட்டணி அமைத்து கொண்டு ஜால்ரா அடித்து கொண்டிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள் அதிமுக தேய்ந்து கொண்டிருக்கிறது. என்று நான் சொல்கிறேன் அதிமுக ஒன்றும் தேயவில்லை கம்யூனிஸ்ட் கட்சி தான் தேய்ந்து கொண்டிருக்கிறது. என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.