தூத்துக்குடியில் புதிதாக ஜெ.ஜெ பன்நோக்கு பல் மருத்துவமனை திறப்பு விழா சக்தி விநாயகர் கோயில் மெயின்ரோடு பிரையன்ட் நகர் முதல் தெரு மேற்கு பகுதியில் இன்று (16.04.2025) காலை நடைபெற்றது.



இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு ஜெ.ஜெ பன்நோக்கு பல் மருத்துவமனையினை அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஜெபிஷா ராஜ்மோகன் முன்னிலையில் திறந்து வைத்து சிறப்பு செய்தார்.



புதன்கிழமையான இன்று திறப்பு விழாவையொட்டி இன்று (16.04.2025) முதல் வருகின்ற (26.04.2025) வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை (ஞாயிறு முன் பதிவு மட்டும்) இலவசமாக பல் பரிசோதனை செய்யப்படும்.



புதிய பல் மருத்துவமனை திறப்பு விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக பல் பரிசோதனை செய்து கொண்டனர்.