தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூட்டணிக்காக எங்களை (நாம் இந்தியர் கட்சியை) அணுகினால் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். என்று தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நாம் இந்தியர் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி பரபரப்பாக செய்தியாளருக்கு  பேட்டியளித்தார்.


நாம் இந்தியர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று (14.04.2025) மாலை போல் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.

நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாம் இந்தியர் கட்சியின் மாநிலச் செயலாளர் பொன்ராஜ், மாநில பொருளாளர் ஜெயகணேஷ் உள்ளிட்ட நாம் இந்தியர் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாம் இந்தியர் கட்சியின் மாநில தலைவர் என்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது நாம் இந்தியர் கட்சியின் தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி கூறியதாவது :-

2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் இந்தியர் கட்சி கண்டிப்பாக போட்டியிடும் நாம் இந்தியர் கட்சி தமிழகத்தை நிர்வாகம் (தமிழகத்தை ஆளுவதற்கு) பண்ண வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. கட்சி ஆரம்பித்து கடந்த ஏழு வருடங்களாக நாம் இந்தியர் கட்சி படிப்படியாக வளர்ந்து வருகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் நாம் இந்தியர் கட்சி போட்டியிடும் என தெரிவித்த என்.பி. ராஜா பெரியசாமி தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

தமிழகத்தின் தற்போதைய தேர்தல் நிலை எப்படி உள்ளது என்றால், பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் வாக்காளர்களை சந்தோஷப்படுத்துவது தேர்தல் சமயங்களில் தேர்தலில் ஆளுகிற கட்சியோடு கூட்டணி அமைத்து கொண்டால் தான் மக்களுக்கான திட்டங்களை தடையில்லாமல் கொண்டு போய் சேர்க்க முடியும் என்றார்.

தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகள் கூட்டணி அமைந்துள்ளது. இதுபோல விஜய் செல்வாக்கான ஒரு நடிகர் அவரும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். விஜய் தோல்வியே சந்திக்க தயாரானவரா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தோல்வியை சந்திக்க தயாரான அரசியல்வாதிகள் மட்டுமே தமிழகத்தில் நிலைக்க முடியும் என நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் நேரத்தில் எங்களை அணுகினால் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். ஒன்று அல்லது இரண்டு சீட்டுக்காக போய் நிற்கப் போவதுமில்லை என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். நாம் இந்தியர் கட்சியின் மாநில தலைவர் என்.பி. ராஜா பெரியசாமி அமைச்சர் கீதா ஜீவனின் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.