தூத்துக்குடியில் ஏப்ரல் 15ம் தேதியான இன்று (15.04.2025) காலை அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் தொழிலாளர்களுக்கும், போக்குவரத்து கழகத்திற்கும் விரோதமாக செயல்படும் நிர்வாக இயக்குனரை கண்டித்தும், அவர்மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழகம் முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான வாயில் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்திற்கு சிஐடியு பணிமனை தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணை செயலாளர் பிச்சை மணி துவக்க உரை நிகழ்த்தினார். (RAILWAY TRANSPORT LEATER) சிஐடியு டென்சிங், தூத்துக்குடி மாவட்ட சிஐடியு தலைவர் பேச்சு முத்து, மாநில நிர்வாக குழு, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பூபதி, ஓய்வு பெற்றோர் அமைப்பு கதிரேசன் நல்லப்பெருமாள், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகி சி.ஐ.டி.யு பீட்டர் அருள்ராஜ், சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஜோசப் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். பணிமனை செயலாளர் மாயக்குமார் நன்றியுரை ஆற்றினார்.



1. தொழில்நுட்ப ஊழியர்களை நியமனம் செய்!

2. பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்து!

3. பேருந்தின் முன்பக்க கிரில் மூடச்சொல்லும் விஞ்ஞானமே ஓட்டுநரின் ஆரோக்கியத்திற்கு யார் பொறுப்பு!

4. வசூல் குறைவுக்கு நடத்துனர் காரணம் என தண்டனை தரும் நிர்வாகமே!

5. முன்பதிவு வசூல் குறைவுக்கு யார் பொறுப்பு யாருக்கு தண்டனை!

6. டிஜிட்டல் முறையில் பயனடி டிக்கெட்டில் ஏற்படும் இழப்புக்கு தீர்வு என்ன? யார் பொறுப்பு?

7. எல்லாவற்றிலும் கடுமையாய் நடந்து கொள்ளும் ஒற்றை அதிகாரமே!

8. பேருந்து தூய்மையில் ஒப்பந்ததாரிடம் கடுமை இல்லையே ஏன்! ஏன்!

9. எல்லோரையும் கடுமையாய் ஆட்டி வைத்து அதையே பேச வைத்து திரை மறைவாய் நடப்பது என்ன! என்ன!

10. பணியின் தவறுக்கு தண்டனையாக இடமாற்றம்!

11. பணியே செய்யாதவனுக்கு வெண்சாமரம் வீசலாமா!

12. தரமற்ற உதிரிபாகம் தடப்பழுதுக்கு தொழில்நுட்ப ஊழியர் சஸ்பென்சன்!

13. விபத்துக்கு ஓட்டுநர் பொறுப்பு!

14. வருவாய் குறைவுக்கு நடத்துனர் பொறுப்பு!

15. பயண முறிவுக்கு தொழில்நுட்ப பணியாளர் பொறுப்பு!

16. சிலாக் அஐஸ்டர், ரேடியேட்டர், பிரேக் டிரம், டயர், டிஸ்க் உதிரிபாகம் எங்கே! நடவடிக்கை மட்டும் இங்கே!

17. மாதம் ஆயிரக்கணக்கில் உடையும் வீல் ஸட்டுகள் டி.வி.எஸ். ல் வாங்காமல் காயலான் கடையில் வாங்கி (Hub) சேதமடைய செய்வதா?

18. கொடுமைக்கு முடிவு காண கூடுவோம்!

19. நமது வேதனைகளை வீதியில் வெளிச்சம் போட்டுக் காட்ட வருகிறது அரசு விரைவு போக்குவரத்து கழகம் தூத்துக்குடி

என நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷ முழக்கங்களை எழுப்பி அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.