சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.



தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் கிராமப்புற பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம் மாவட்ட ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக அரசு நியமிக்கும் வகையில் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சிகளிலும், மாவட்ட ஊராட்சிகளிலும் ஒலிக்க தேவையான முயற்சிகளை மசோதாக்கள் மூலமாக சட்டமாக்கியுள்ளது. மன மகிழ்வை தருகிறது.

மேலும் இச்சட்டம் நடைமுறைக்கு வரும்பொழுது நகரப்புற உள்ளாட்சிகளில் 650 மாற்றுத்திறனாளிகளும், கிராம பஞ்சாயத்துகளில் 12913 நபர்களும், ஊராட்சி ஒன்றியங்களில் 388 நபர்களும், மாவட்ட ஊராட்சிகளில் 37 நபர்களும், அரசின் மூலமாக நியமிக்கப்பட இருப்பது திராவிட மாடல் அரசு அனைவருக்கும் ஆனது என்ற தத்துவத்தை மீண்டும் மீண்டும் நிலை நிறுத்தி வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மாவட்டம் திமுக மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் எங்களது நன்றிகளையும், வாழ்த்துக்களையும், தெரிவிப்பதற்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவனை தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் அணி உறுப்பினர்கள் மோசஸ், ஜெஸ்லி, பத்மநாபன், மற்றும் நிர்வாகிகள் அமைச்சரை நேரில் சந்தித்து முதல்வருக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்வதாக கூறி பொன்னாடை போர்த்தி நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.


திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் திமுக மாவட்ட செயல்வீரர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.