தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (19.04.2025) காமராஜ் கல்லூரில் வைத்து மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ். சுந்தர் தலைமையில் நடைபெற்றது.  

மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலருமான சுதா மற்றும் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர் வசந்தி M.L., ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மேற்படி நிகழ்வில் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏனைய நீதிபதிகள், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், மாவட்ட துணை வன அலுவலர், கல்லூரி முதல்வர், கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

முன்னதாக மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதி பத்திரிக்கை செய்தியை வெளியிட்டார். மேற்படி சிறப்புரையில் சுற்றுசூழல் பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என்றும், மரம் நடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டு என்று விளக்கமாக எடுத்துரைத்தார். மேற்படி மாபெரும் மரம் நடும் விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் / முதுநிலை உரிமையியல் நீதிபதி. கலையரசி ரீனா M. L., மற்றும் இளநிலை நிர்வாக உதவியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.