(24.11.2025), இன்று திங்கள் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் “MY BHARAT KHENDRA” சார்பில் “Let Us Walk for Unity – Rise for Nation” என்ற தேசிய ஒற்றுமை நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தங்கபழம் கல்விக் குழுமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மத்திய அமைச்சர் திருமதி Dr. ராணி ஸ்ரீ குமார், தங்கபழம் கல்விக் குழும சேர்மன் திரு. எஸ். தங்கபழம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் NSS ஒருங்கிணைப்பாளர் Dr. வேலப்பன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய கலை வழியாக சமூகப் பணியை தொடர்ந்து செய்து வரும் தூத்துக்குடி சகா கலைக்குழு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

சமூக அறத்துடன் கலந்த கலைப்பணிக்காக, மத்திய அமைச்சர் அவர்கள் முனைவர் சகா மா. சங்கர் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கி பாராட்டுச் செய்தார்.

இந்நிகழ்வில் சகா கிராமிய கலைக்குழுவின் பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மாடாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கிராமிய பாடல் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பல கலைநிகழ்ச்சிகள் மேடை முழுவதும் ரசனையை பரப்பின.

மாணவர்கள் அனைவரும் இந்திய ஒற்றுமை உறுதிமொழி ஏற்று, தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்து குழுவாய்ப் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். சகா கலைக்குழு வழங்கிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தேசிய ஒற்றுமையையும், கலாச்சார மரபுகளையும் வலியுறுத்திய நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது.