தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கபழம் கல்விக் குழுமத்தில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், MY BHARATH KHENDRA சார்பில் “Let us walk for Unity – Rise for Nation” நிகழ்ச்சி நேற்று (24.11.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் திருமதி Dr. ராணி ஸ்ரீகுமார், தங்கபழம் கல்விக் குழுமத்தின் சேர்மன் திரு. எஸ். தங்கபழம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் NSS ஒருங்கிணைப்பாளர் Dr. வேலப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்த விழாவின் சிறப்பு தருணமாக, கலைத் துறையில் நீண்டகாலமாக கிராமிய கலைகளைப் பாதுகாப்பதில், பரப்புவதில், இளைஞர்களுக்கு கலைப்பயிற்சி வழங்குவதில் தொடர்ந்து பணியாற்றி வரும் தூத்துக்குடி முனைவர் சகா. மா. சங்கர் அவர்களின் சிறப்புப் பணியை மத்திய அமைச்சர் நேரடியாக பாராட்டி பாராட்டு விருதும் வாழ்த்தும் வழங்கினார்.
அத்துடன் சகா கிராமிய கலைக்குழுவினரின் பறையாட்டம், ஓயிலாட்டம், கரகாட்டம், மாடாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் கலைவிழாவை மேலும் சிறப்பித்தன. கலைக் குழுவினரின் திறமைக்காக அவர்களும் மேடையில் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.
கலை நிகழ்ச்சியின் நிறைவில் மாணவர்கள் தேசியக் கொடியை தாங்கி “இந்திய ஒற்றுமை உறுதி மொழி” ஏற்று, குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது.
முனைவர் மா. சங்கரின் கலைப்பணியை அரசுத் துறை அளவில் பாரட்டியமை, கிராமிய கலை மற்றும் கலைஞர்களின் வளர்ச்சிக்கு முக்கியமான இன்னொரு அடியாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி
முனைவர் மா. சங்கருக்கு மத்திய அரசின் கலைப் பாராட்டு விருது — “ஒற்றுமைக்கான நடை” நிகழ்ச்சியில் சகா கலைக்குழுவும் கௌரவிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சகா கலைக்குழுவின் பாரம்பரிய கலைபுயல்… மத்திய அரசின் ‘Let Us Walk for Unity – Rise for Nation’ நிகழ்ச்சியில் ஒளிர்ந்த திருநெல்வேலியின் கலைப்பெருமை!!
அடுத்த
தூத்துக்குடி அய்யர்விளை வெள்ளப்பெருக்கு – அமைச்சர் கீதாஜீவன் துரித நடவடிக்கை!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026