தூத்துக்குடி அருள்மிகு தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ புற்று மாரியம்மனுக்கு 24-ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது.


இத்திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 8 மணிக்கு சர்ப்ப ஹோமமும், காலை 10 மணிக்கு 108 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது. பின்னர் நண்பகல் 12 மணிக்கு ஸ்ரீ புற்று மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


மாலை 6 மணிக்கு ஸ்ரீ புற்று மாரியம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் அம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரணை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் மற்றும் பால் பாயாசம் வழங்கப்பட்டது.
இந்த பூஜை மற்றும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டார்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


இந்நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பால குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.