வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் தன்னுடைய தாக்கத்தை காட்டிக் கொண்டிருக்கும் நிலையில், மழையிலும் பணியில் தளராமல் ஓடிக்கொண்டிருக்கும் ஊடகத்துறையினருக்காக தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் குடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதற்கு முன், செய்தியாளர்களுக்கும், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கும் மழைகோட் வழங்க வேண்டும் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவன் தனிப்பட்ட அக்கறை காட்டியிருந்தார். அதன்படி போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் மழைகோட்கள் வழங்கப்பட்டன.
அதே தொடர்ச்சியில், பிரஸ் கிளப் வளாகத்தில் உறுப்பினர்களுக்கான குடை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தது. நிகழ்வில் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று வழங்கும் நிகழ்வை முன்னிலைப் படுத்தினர்.
மேலும் செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், ராஜன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர் சரவணன் ஆகியோரும் கலந்துகொண்டனர். உறுப்பினர்கள் முரளி கணேஷ், மாணிக்கம், மாரிமுத்து, நீதிராஜன், ஜெயராம், நடராஜன், அறிவழகன், இசக்கிராஜா, காதர்முகைதீன், கருப்பசாமி, ரவி, அருள்ராஜ், மகாராஜன், சந்தனரமேஷ் ஆகியோரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
மழைக்காலத்தில் ஊடகத்துக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் ‘குடை கவசம்’!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் தொகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் — MLA எம்.சி. சண்முகையா தீவிர கண்காணிப்பு!!
அடுத்த
“தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த நன்னீர்த் தந்தை குரூஸ் பர்னாந்துக்கு காங்கிரஸின் மரியாதை”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026