தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் நடைபெற்ற கோலப் போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். பெண்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற இந்த போட்டியில், பாரம்பரியமும் படைப்பாற்றலும் கலந்த கோலங்கள் காட்சியளித்தன.


இந்த நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டியாளர்களை ஊக்குவித்தனர்.


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி ரோச் பூங்காவிற்கு எதிரே அமைந்துள்ள எக்கோ பார்க்கில் புதுப்பிக்கப்பட்ட படகு குழாமை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.


தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சியும் தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் இணைந்து, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் இந்த படகு குழாம் தரம் உயர்த்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.
பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் படகு குழாம் மீண்டும் திறக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தம்பி தொ. நிர்மல்ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வுகள், தூத்துக்குடி மாநகர மக்களிடையே கொண்டாட்ட சூழலை உருவாக்கியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.