தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 50வது வார்டில், குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் P.கீதா ஜீவன் அவர்களின் உத்தரவின்படி, கவுன்சிலர் சரவணகுமார் மேற்கொண்ட முயற்சியில், AMM சின்ன மணி நாடார் பள்ளியின் தெற்கு வாசலை இணைக்கும் சாலைகளில், வாகன ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் “பள்ளி அருகில் உள்ளது – மெதுவாக செல்லவும்” என்ற வாசகம் அடங்கிய இரண்டு எச்சரிக்கை அடையாள பலகைகள் நடப்பட்டன.
இந்த பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிக வேகத்தில் செல்லும் நிலை காணப்பட்டதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அடையாள பலகைகள் நிறுவப்பட்ட இடத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் நேரில் பார்வையிட்டார்.
இதன் மூலம் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும் என பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், பள்ளி நிர்வாகமும் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வின்போது, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் செ. கார்த்திகேயன் (DCE), தூத்துக்குடி மாநகர திமுக ஆகியோர் உடனிருந்தனர்.