தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.51.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டும், மேற்கொள்ளப்படவுள்ளும் உள்ள வளர்ச்சி பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் தொடங்கி வைத்து, திறந்து வைத்தார்.


இதன் ஒரு பகுதியாக, கீழஅருணாச்சலபுரம் கிராமத்தில் ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, வன்னிப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.


மேலும், மேலஅருணாச்சலபுரம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணியும், சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணியும் தொடங்கி வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வுகளில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன், தினகரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், புதூர் மத்திய ஒன்றிய தேர்தல் பார்வையாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி மோகன்தாஸ், ஒன்றிய துணைச் செயலாளர் கொப்பையா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துராஜ், ஒன்றிய பிரதிநிதி வீரப்பெருமாள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


இந்த வளர்ச்சி பணிகள் கிராமப்புற மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, பகுதிகளின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.