ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியில், கீழ செக்காரக்குடி, மேல செக்காரக்குடி, நடுசெக்காரக்குடி மற்றும் சொக்கலிங்கபுரம் கிராமங்களில் 28 தெருக்களில் ரூ.2.13 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தாஹீர் அகமது, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுக ராஜா நயினார், உதவி பொறியாளர் தளவாய், வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் சிவஞானம், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ் காந்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொம்பையா, கிளைச் செயலாளர்கள் மாயாண்டி, ஐஸ் மாரியப்பன், கருப்பசாமி, சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சோரிஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் 13 மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை தனராணி, தகவல் தொழில்நுட்ப அணி சின்னதுரை, கலை இலக்கிய அணி அருண், கிளை செயலாளர் முத்து, ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


மேலும், புதிய முத்தூர் நீராவி மேடு, ரைஸ் மில் பகுதி மற்றும் வடக்கு தெரு பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவது குறித்து தகவல் அறிந்ததும், ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகளை நேரில் அழைத்து உடனடியாக சரிசெய்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதால், பொதுமக்கள் நன்றியினை தெரிவித்தனர். அத்துடன், நீண்ட நெடிய காலங்களுக்குப் பிறகு மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு புதிய மகளிர் விடியல் பயண பேருந்து தொடங்கி வைக்கப்பட்டது.


இதற்கு முன் அரசு பேருந்துகள் இயங்காத நிலையில், பொதுமக்கள் தனியார் மினி பேருந்துகளை மட்டுமே நம்பியிருந்தனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி – மாப்பிள்ளையூரணி – டேபிஸ்புரம் – மேல அழகாபுரி – சிலுவைபட்டி – கீழ் அழகாபுரி – தாளமுத்து நகர் –சோட்டையன் தோப்பு வழித்தடத்தில் புதிய மகளிர் விடியல் பயண பேருந்து கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் எம்எல்ஏ பொதுமக்களுடன் பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.


இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளர் சண்முகம், கிளை மேலாளர் சுரேஷ், லிங்கசாமி, மனோகரவேல், மாடசாமி, ரமேஷ், சுரேஷ்குமார், ஜோன், பரமசிவம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் TTC ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்பாண்டி ரவி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், சேவியர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின், பால்துரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிரணி ஆரோக்கியமேரி மற்றும் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் அடிப்படை வசதிகள், கல்வி, குடிநீர், போக்குவரத்து என அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வேகமெடுத்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.