தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் குழுவின் வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் முன்னிலை வகித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், கதிர்வேல், முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எடிசன், மாவட்ட மகளிர் பிரிவு முன்னாள் தலைவி முத்துவிஜயா, மாநில மகளிர் அமைப்பாளர் ஜெயஜோதி, கலைப்பிரிவு மாரியப்பன், ரூஸ்வெல்ட், செயற்குழு உறுப்பினர் வசந்தி, வார்டு தலைவர்கள் வேல்குமார், முருகேசன், சுடலைமுத்து செல்லராஜ், வாசிராஜன், ரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துவது மற்றும் சென்னையில் நடைபெறும் பாதயாத்திரையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் குழுவிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வது ஆகிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.