தூத்துக்குடி மாநகர் 34-வது வார்டு, ஆசிரியர் காலனி 2-வது தெரு மேற்கு பகுதியைச் சேர்ந்த திமுக வட்ட செயற்குழு உறுப்பினரும் பாக முகவருமான சேர்மத்துரை மற்றும் அவரது மனைவி சரோஜா, கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவிற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, தூத்துக்குடி கோரம்பள்ளம் கலெக்டர் அலுவலகம் அருகே எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சேர்மத்துரை மற்றும் அவரது மனைவி சரோஜா (வயது 49) இருவரும் பலத்த காயமடைந்தனர். சரோஜா தலையில் கடுமையாகக் காயமடைந்ததால் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அக்டோபர் 1-ஆம் தேதி சரோஜா உயிரிழந்தார்.
இந்த செய்தியைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், சேர்மத்துரை இல்லத்துக்கு சென்று துக்கம் பகிர்ந்து ஆறுதல் கூறினார். மேலும் தேவையான உதவிகளையும் செய்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த் சேகரன், 34-வது வட்ட திமுக செயலாளர் சுரேஷ்குமார், வட்ட அவைத் தலைவர் ஆனந்தன், வட்ட பிரதிநிதி ஜெயராம், பகுதி மீனவரணி அமைப்பாளர் டைடஸ் மோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி திமுக பாக முகவர் மனைவி சாலை விபத்தில் உயிரிழப்பு – அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆறுதல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கார்கே விரைவில் குணமடைய தூத்துக்குடியில் சிறப்பு பூஜை!!
அடுத்த
இஸ்ரேல் – அமெரிக்காவை கண்டித்து ராமநாதபுரம் கீழக்கரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026