தூத்துக்குடியில் முன்னாள் கவுன்சிலர் பி.எஸ். அன்பரசனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு 50 வது வார்டில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் மறைந்த முன்னாள் கவுன்சிலரும், வழக்கறிஞரும் , சமூக போராளியுமான பி.எஸ். அன்பரசன் எம்.ஏ.பி.எல்., 48 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (07.06.2025) காலை கணேசன் காலனி 1 வது தெரு அந்தோணியார் கெபி எதிரே அமைந்துள்ள அன்பரசனின் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மறைந்த முன்னாள் கவுன்சிலர், பி.எஸ். அன்பரசனின் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செய்து அவரது நினைவாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் 50 வட்ட கழக பிரதிநிதிகள் எம். வேல்மணி, A. ராஜேந்திரன், G.M. செல்வம், S. ராஜேஷ் லக்ஷ்மணன், அண்ணனின் அன்பு தம்பி மணிகண்டன் துணைச் செயலாளர்கள் K. ரிலாக்ஸ் ஜெய மேரி, எஸ். மணிகண்டன், மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜி சங்கரநாராயணன், பகுதி வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எம்.சி. கௌதம், விவசாய அணி துணை அமைப்பாளர் பிரேம்குமார் தங்கராஜ், கலை இலக்கியப் பேரவை சிவபெருமாள், விளையாட்டு மேம்பாட்டு அணி சீனிவாச குமார், தொழிலாளர் அணி ஆதிமூலம், பகுதி தொண்டர் அணி துணை அமைப்பாளர் செல்வின் கோவில் ராஜ், கழக செயற்குழு உறுப்பினர் இசக்கி ராஜா, கழக மூத்த முன்னோடிகள் ராஜ பெருமாள், வீரபாண்டியன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

