துாத்துக்குடி மாநகராட்சியில் எந்தவித முறைகேட்டுக்கும் இடமில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பா.ஜ., மாவட்ட தலைவர் பொய்யான தகவலை கூறியிருக்கிறார் என்று மேயர் ஜெகன் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
துாத்துக்குடி மாநகராட்சி பணிகள் முறைகேடு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றிருப்பதாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து துாத்துக் குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறியிருப்பதாவது; முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் துாத்துக்குடி மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவிற்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது.
மக்களுக்கு தினமும் குடிநீர், வடிகால் வசதிகள், தெருவிளக்கு வசதிகள் என்று அனைத்து அடிப்படை வசதிகளும் முற்றிலுமாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு காண்பதற்கு வாரந்தோறும் மண்டல குறை தீர்க்கும் முகாம் நடத்தப் பட்டு முகாமிலே சொத்து வரி பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றுகள், பெயர் திருத்தம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
துாத்துக்குடி மாநகராட்சியில் நடந்து வரும் வளர்ச்சியினை பொறுக்க முடியாமல் துாத்துக்குடியை பற்றியே தெரியாத தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சித்ராங்கதன் மாநகராட்சி குறித்து உண்மைக்கு புறம்பான தகவல் களை பேட்டியாக கொடுத்திருக்கிறார். சித்ராங்கதன் சொல்வது அனைத்தும் பொய் மாநகராட்சியில் பணிகள் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண் டிருக்கிறது. எந்தவித முறைகேட்டுக்கும் இடமில்லை.
எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு மாநகராட்சி நடந்து வருகிறதே என்ற வயிற்றெரிச்சலிலும், பா.ஜ. என்ற கட்சி துாத்துக்குடியில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக பா.ஜ. மாவட்ட தலைவர் பொய் புகார் கூறியிருக்கிறார்.
மாநகராட்சியில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறது. கோர்டில் அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க மாநகராட்சி தயாராக இருக்கிறது. அதன் பிறகு சித்தராங்கதனின் பொய் மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வரும். இதோடு மாநகராட்சி பற்றி பொய் சொல்வதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று மேயர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
துாத்துக்குடி மாநகராட்சியில் முறைகேடு எதுவும் இல்லை - பாஜக குற்றச்சாட்டுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி விளக்கம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டில் மறைந்த முன்னாள் கவுன்சிலர் பி.எஸ். அன்பரசனின் 48 வது பிறந்தநாள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
அடுத்த
நாளைய உலகில் சரித்திரம் படைத்து சாதனையாளர்களாக உருப்பெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் - இலவச பொறியியல் கல்விக்கான உத்தரவு கடிதம் வழங்கும் விழாவில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., பேச்சு!!
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026