தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்ரமராஜா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி புதுக்கோட்டை சங்க அலுவலகத்தில் வைத்து இன்று காலை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச் செயலாளரும், புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவருமான பீட்டர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள், துண்டு மற்றும் உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் செயலாளர்கள் கே. பெரியசாமி, முருகன், துணை தலைவர்கள் பி.என். பெரியசாமி, சர்க்கரை, பொருளாளர் ராபின்சன், துணை செயலாளர்கள் கணேசன், வியாகப்பன், சந்திர சேகர், இணைச் செயலாளர்கள் ராபின்சன் குருசோ, ஆதி நாராயணன், இளைஞரணி அமைப்பாளர்கள் டேவிட் குமரன், சக்திலிங்கம், இளைஞரணி செல்லப்பா, சுப்பையா, மகாராஜன், கணேசன், விஜயன், உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
