தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை தெர்மல் நகர் பகுதியில் ஊரணி ஒத்தவீடு, காதர் மீராண்நகர், கோயில்பிள்ளை நகர், முத்து நகர் ஆகிய பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, ஊரணி ஒத்த வீடு கழக செய்வீர்கள், காதர் மீராண்நகர் கழக செயல்வீரர்கள், கோயில்பிள்ளை நகர் செயல்வீரர்கள், மற்றும் முத்து நகர் கழக செயல்வீரர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

