பாஜக அரசு கொண்டு வந்த VB–G RAMG திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) எந்த மாற்றமுமின்றி தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பாரத பிரதமருக்கும் அனுப்பும் வகையில் தயாரிக்கப்பட்ட கோரிக்கை மனுவுடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில், “ஒன்றிய அரசை கண்டிக்கிறோம்”, “வன்மையாக கண்டிக்கிறோம்” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய காங்கிரஸ் நிர்வாகிகள், பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து VB–G RAMG திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை காங்கிரஸ் கட்சியினர் அளித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மண்டல தலைவர் எஸ்.பி.ராஜன், மேற்கு மண்டல தலைவர் செந்தூர்பாண்டி, வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பி. சுடலையாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, டேவிட் வசந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் மைக்கேல் பிரபாகர், மடத்தூர் தனபால் ராஜ், காமாட்சி, கோபால், மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியம், துணை அமைப்பு மாவட்ட தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஆல்வின், மகிளா காங்கிரஸ் தலைவர் பிரீத்தி வினோத், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிபிராஜ் மோகன், எஸ்.சி. துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு பாலசுப்பிரமணியன், மீனவர் அணி மிக்கேல், மனித உரிமை வழக்கறிஞர் கியூபெட், கலைப்பிரிவு பெத்துராஜ், சின்னக்காளை, முன்னாள் மாமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி முத்துவிஜயா, மகிளா காங்கிரஸ் மாநில அமைப்பாளர் ஜெயஜோதி, கிழக்கு மண்டல துணைத் தலைவி அசன்பாத்து, முன்னாள் மாவட்ட எஸ்.சி. துறை தலைவர் ராஜாராம், ஐ.என்.டி.யூ.சி கண்ணன், வார்டு தலைவர்கள் முத்துராஜன், எம்.கே.முனியசாமி, தனுஷ் கோமு, கிருஷ்ணன், சுப்பிரமணியன், செயலாளர்கள் ராஜ்குமார், காமராஜ் கள்ளன், காமராஜ் அல்போன்ஸ், செல்வவிநாயகம், மரியசிங்கம், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.