தூத்துக்குடியில் தமிழரின் பாரம்பரியம், வீரக்கலை, மருத்துவம் ஆகியவற்றை ஒரே மேடையில் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் தமிழன்டா சங்கமம் 2026 விழாவின் ஒரு பகுதியாக, இயற்கை மருத்துவ கண்காட்சியும் மாநில அளவிலான சிலம்பம் போட்டியும் அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியை பார்வையிட்ட அவர், சிலம்பம் விளையாடி கலைஞர்களை உற்சாகப்படுத்தினார்.
தமிழரின் கலைகள், பாரம்பரிய மருத்துவம், பாரம்பரிய உணவுகள், நாட்டு நாய்கள் உள்ளிட்ட தமிழர் வாழ்வியலைப் பறைசாற்றும் வகையிலும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் நோக்கிலும் தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழு சார்பில் இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று தங்களது கலைநிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர்.
தமிழன்டா சங்கமம் 2026 விழாவை முன்னிட்டு தமிழன்டா இயக்கம், கே. சின்னத்துரை அன் கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா குழுமம், சைன் யோகா பவர், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம், காமராஜ் கல்லூரி உடற்கல்வித்துறை, காமராஜ் மகளிர் கல்லூரி, கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகடாமி, பிளாக் ஃபாரஸ்ட் லீட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி, யோவா அகடாமி, ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த மூன்றாவது தமிழன்டா சங்கமத்தை நடத்தி வருகின்றன.
விழாவில் தெற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், முன்னாள் கவுன்சிலர் அகஸ்டின், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சங்கர், பேச்சியப்பன், தமிழன்டா கலைக்குழு இயக்க தலைவர் ஜெகஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.