தூத்துக்குடி நகர வளர்ச்சிக்குப் பெரும் தூணாக திகழ்ந்த இராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 156ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, குரூஸ் பர்னாந்தீஸ் நற்பணி மன்றம் சார்பில் பழைய மாநகராட்சி முன்பு 24வது ஆண்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தூத்துக்குடி நகர சபையில் ஐந்து முறை நகர மன்றத் தலைவராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்த குரூஸ் பர்னாந்து அவர்கள் தனது பதவிக்காலத்தில் பொதுக்கல்லறைத் தோட்டம், கூட்டுறவு வங்கி, சனிக்கிழமை சந்தை, தாய்சேய் நல இல்லம், நகராட்சிக்கான அலுவலக இடம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை பல வழங்கியதால், இந்நகர மக்கள் அவரை “தூத்துக்குடியின் தந்தை” என போற்றுகின்றனர். தமிழ்நாடு அரசு அவருக்காக மணிமண்டபம் அமைத்து, ஒவ்வோர் ஆண்டும் அரசு விழாவும் நடத்தி வருகிறது.

நற்பணி விழாவின் சிறப்பு நிகழ்வுகள் விழாவிற்கு வந்தவர்களை நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்றார். நிகழ்வுக்கு முன்னாள் நகர மன்ற உறுப்பினரும் மன்ற அமைப்பாளருமான எட்வின் பாண்டியன் தலைமையேற்றார். செயலர் சசிகுமார் முன்னிலை வகித்தார். வந்திருந்த அனைவருக்கும் பொருளாளர் டெரன்ஸ் நன்றியுரை வழங்கினார்.

பழைய மாநகராட்சி முன்பு நடைபெற்ற விழாவில் பரத குல மகளிர் அணி தலைவர் நிர்மலா கேக் வெட்டி தலைவர்களுக்கு வழங்கினார். லூசிய மாற்றுத் திறனாளிகள் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்குத் தலா ₹10,000 நன்கொடை திரேஸ்புரம் ஊர்நலக் குழு தலைவர் வில்லியம் மஸ்கர்னாஸ் வழங்கினார்.

10 ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் ஏரல் அருட்பணியாளர் ரவிந்திரன் அடிகளார் வழங்கினார். 100 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசிப் பைகள் மதுரை புனித சவேரியார் சாவடி டிரஸ்ட் தலைவர் சுரேஷ் மண்ணத்தோ வழங்கினார்.

300 நபர்களுக்கு அன்னதானம் தொடக்கம் நாட்டுப் படகு மீனவர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா போஸ் ரீகன் தொடங்கி வைத்தார். 600 நபர்களுக்கு டிபன் வழங்கும் திட்டம் சேவியர் வாஸ், ஞாயம் ரொமால்டு தொடங்கி வைத்தனர். பல அமைப்புகளின் தலைவர்கள் கலந்து ஆதரவு

வீராங்கனை இயக்கத்தின் பேராசிரியர் பாத்திமா பாபு, அன்னை பரதர் நலச்சங்க நிர்வாகிகள் காஸ்ட்ரோ, பாஸ்கர், நெய்தல் எழுத்தாளர் இயக்கத்தின் தமிழ்ச்செம்மல் நெய்தல் அண்டோ, திரேஸ்புரம் ஊர்நலக் குழுவின் ராபர்ட், ராஜ், அமலிநகர் பிரேசில், ஏரல் பெஸ்கி, தாமஸ், எழுச்சிப் போராளிகள் இயக்கத்தைச் சேர்ந்த கனிட், ராஜன், ராகேஷ், மேலும் நற்பணி மன்ற நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், சேவியர் சில்வா, வர்க்கீஸ், ஆண்ட்ரூஸ், ஜெனிஸ், ஜே.பி, அரவிந்த், ரியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவை சிறப்பாக நடத்திய ஹெர்மன் கில்டு, எட்வின் பாண்டியன், நெய்தல் அண்டோ ஆகியோருக்கு வணிகர் சங்க பேரவையைச் சேர்ந்த வினாயகமூர்த்தி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

மாலை அணிவிப்பு மரியாதை முன்னதாக திரேஸ்புரம் மக்கள், பல ஊரக மக்கள், தூத்துக்குடி இளைஞர்கள் இணைந்து மாதா கோவில் முன்புள்ள ரோச் விக்டோரியா சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து இருசக்கர வாகன பேரணியாக புறப்பட்டு குரூஸ் பர்னாந்தின் மணிமண்டபம் வட்டத்து தெப்பம் அருகிலுள்ள சிலை பழைய மாநகராட்சி முன் உள்ள சிலை
ஆகியவற்றில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடியின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த குரூஸ் பர்னாந்துவை நினைவு கூரும் இந்நற்பணி விழா, பொதுநலச் செயல்களால் சிறப்பாக நிறைவு பெற்றது.