தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது ஆணைப்படியும்,
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின் பேரிலும், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா நேரில் சென்று பார்வையிட்டார்.
ஒட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட —
1. ஒட்டநத்தம் பாகம் எண் 23 மற்றும் 24 வாக்காளர்களுக்கு ராமானுஜம் இந்து தொடக்கப்பள்ளியில்,
2. மணியாச்சி பாகம் எண் 25 வாக்காளர்களுக்கு ஆர்.சி. தொடக்கப்பள்ளியில்,
3. ஒட்டப்பிடாரம் பாகம் எண் 38, 39, 40 வாக்காளர்களுக்கு TMB மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியில்,
4. புதியம்புத்தூர் பாகம் எண் 50, 52, 53 வாக்காளர்களுக்கு ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
ஒவ்வொரு மையத்திலும் கணக்கீட்டு படிவங்கள் சரியான முறையில் நிரப்பப்படுகிறதா என்பதை எம்.சி. சண்முகையா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து தேவையான வழிமுறைகளை வழங்கினார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு பணிகளை ஒருங்கிணைத்தனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“உப்பள தொழிலை காப்போம் — எடப்பாடி பழனிச்சாமியுடன் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்களின் முக்கியச் சந்திப்பு”
அடுத்த
தூத்துக்குடியின் தந்தை குரூஸ் பர்னாந்துவை போற்றிய மக்கள் நல விழா — 24வது ஆண்டு நற்பணி நிகழ்வு சிறப்பாக நிறைவு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026