தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் பாரம்பரிய உப்பளங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட இடங்களைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து பல்வேறு கட்டங்களில் கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.
அந்தப் போராட்டங்களின்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பேசுகையில், “மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு முழு ஆதரவாக அதிமுக துணை நிற்கும். உங்கள் கோரிக்கையை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, இன்று சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சேகர் (செயலாளர்), மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், கணேஷ்நகர் சுயம்பு நாடார், பாலசுப்பிரமணியன், ஈபால், பொன்ராம், பிரபாகர், பாரத், ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
அப்போது, உப்பு உற்பத்தியாளர்களிடம் பேசுகையில் எடப்பாடி பழனிச்சாமி,
“இது குறித்து மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தகவல் அளித்துள்ளார். விஷயத்தை நான் கவனத்தில் கொண்டு பார்த்துக் கொள்கிறேன்,” என்று உறுதியளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதி அதிமுக செயலாளர் சுடலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
“உப்பள தொழிலை காப்போம் — எடப்பாடி பழனிச்சாமியுடன் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்களின் முக்கியச் சந்திப்பு”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாளில் — தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்” — காங்கிரஸ் கோரிக்கை!!
அடுத்த
ஒட்டப்பிடாரத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்த எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026