தூத்துக்குடி மக்களின் குடிநீர் வசதிக்காக மறக்க முடியாத வரலாற்றுச் சேவையை செய்த கோமகன், ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான க. பெருமாள் சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருமளவில் தேசியத் தோழர்கள் பங்கேற்று குரூஸ் பர்னாந்து அவர்களின் பிறந்தநாள் நினைவை போற்றினர்.
இந்நிகழ்வில் அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், பழங்குடியினர் பிரிவு மாநிலச் செயலாளர் முனியசாமி, மாவட்ட பொது செயலாளர் இக்னேஷியஸ், ரூஸ்வெல்ட், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், எஸ்.சி.எஸ்.டி முன்னாள் தலைவர் ராஜாராம், ஐஎன்டியூசி மனோகரன், சுரேஷ்குமார், முருகேசன், எஸ்.எம்.டி. சுந்தர்ராஜ், சேகர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, துணைத் தலைவி இசக்கியம்மாள், வழக்கறிஞர் செல்வம், காமராஜ், சேக்ஸ்பியர், ஆனந்தராஜ், முத்துராஜ், சிவலிங்கம், முத்து, ரமேஷ், கிரிதரன், பாலன் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்ந்த ஜெயசிங், தியாகு, விஜய், திவாகர், துரை, செந்தில், சூர்யா, இசக்கி முனியசாமி, வினோத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குரூஸ் பர்னாந்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நினைவு வணக்கம் செலுத்திய க. பெருமாள் சாமி அவர்கள், “தூத்துக்குடி மக்களின் தாகத்தை தீர்த்த காவலர் குரூஸ் பர்னாந்து அவர்களின் வரலாற்றுச் சேவையை நினைவாக, தூத்துக்குடி விமான நிலையத்திற்கு ‘குரூஸ் பர்னாந்து விமான நிலையம்’ எனப் பெயர் சூட்ட மத்திய–மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தாழ்மையுடன் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
“குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாளில் — தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்” — காங்கிரஸ் கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“நன்னீர் நாயகன் குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாளை முன்னிட்டு — தூத்துக்குடி மாநகர மதிமுகவினர் மரியாதை செலுத்தினர்”
அடுத்த
“உப்பள தொழிலை காப்போம் — எடப்பாடி பழனிச்சாமியுடன் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்களின் முக்கியச் சந்திப்பு”
இதையும் படிக்கலாம்
மாவீரன் அழகுமுத்து கோன் 269வது ஜெயந்தி: கட்டாரன்குளத்தில் காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை!!
11 Jul 2026
தருவைக்குளத்தில் நாடார் இன வரலாறு குறித்த சிறப்புரை – எழுத்தாளர் தசரதன் பங்கேற்பு; உள்ளூர் எழுத்தாளருக்கு பாராட்டு விழா குழு அமைப்பு!!
11 Jul 2026
கோயில் நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு சாக்தஸ்ரீ சத்குரு சீனிவாச சித்தர் வலியுறுத்தல்!!
11 Jul 2026
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026