அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் வழிகாட்டலில், தூத்துக்குடிக்கு குடிநீர் வழங்கி நகர வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய கோமான் ஐயா ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துவின் 156வது பிறந்தநாள் விழா இன்று 15.11.2025, சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.

தூத்துக்குடி மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னாரது முழு திருவுருவச் சிலைக்கு, கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் மாவட்ட செயலாளர் துரைசிங் ஏற்பாட்டில், திமுக ஆட்சியின் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, தமிழகத்தில் புரட்சித் தமிழர் எடப்பாடியார் மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு திரட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, நகர, வட்ட அளவிலான அண்ணாநா கழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், கழகப் பொறுப்பாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், மீனவர் சங்க நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு, மகளிர் அணி, போக்குவரத்து பிரிவு, மின்சார பிரிவு, கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரான நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கலந்துகொண்ட முக்கிய பொறுப்பாளர்களில் மாநில வர்த்தக அணி செயலாளர் மில்லர் R.L.ராஜா, தெற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ், தெற்கு மாவட்ட விரிவைப் பொறுப்பேற்ற செயலாளர்கள், வழக்கறிஞர் பிரிவு, மீனவர் பிரிவு, அம்மா பேரவை, கூட்டுறவு அமைப்புகள், போக்குவரத்து பிரிவு, டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள், மகளிர் அணி, பல்வேறு முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இடம்பெற்றனர்.