தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கரிசல்காட்டு இலக்கியத்தின் முன்னோடியும், சிறந்த எழுத்தாளருமான கி. ராஜநாராயணன் அவர்களின் நினைவரங்கத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. நேரில் பார்வையிட்டார்.
அப்போது, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் படைப்புகள், புகைப்படங்கள் உள்ளிட்ட நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்ட அவர், மின்னணு நூலகத்தில் உள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது நினைவுக் குறிப்பை பதிவு செய்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சி, தமிழ்க் கரிசல் மண்ணின் எழுத்துப் பாரம்பரியத்திற்கும், கி.ராஜநாராயணன் அவர்களின் இலக்கியச் செல்வத்திற்கும் மரியாதை செலுத்தும் நினைவாக அமைந்தது.
தூத்துக்குடி
கரிசல்காட்டு எழுத்தின் பெருமைமிகு நினைவு — கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தை பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை” என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி – S.I.Rக்கு எதிராக தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
எட்டையாபுரத்தில் பாரதியார் பிறந்த வீடு – பழமை மாறாமல் புதுப்பிப்பு பணிகள் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026