தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒருமைப்பாட்டுடன் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகிலுள்ள மாநகராட்சி செயற்கை புல்வெளி மைதானத்தில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன.


இந்த விளையாட்டு போட்டிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் பங்கேற்று போட்டிகளை பார்வையிட்டனர்.


பொங்கல் பண்டிகையின் பாரம்பரிய உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையிலும், மாநகராட்சி நிர்வாகத்தில் பணியாற்றும் அனைவரிடமும் ஒற்றுமை, உடல் நலம் மற்றும் குழு உணர்வை வளர்க்கும் நோக்கிலும் இந்த விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.


மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது.